கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்த ஆறு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிறந்து 12 மணி நேரத்திற்குள் அந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்றியது தெரியவந்துள்ளது.
அரசு ஆதரவுடன் நடத்தப்படும் ஆய்வு ஒன்றில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 427 பெண்களில் 247 பேர் தாய்மார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
என்றாலும், அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கருவிலிருக்கும்போதே கொரோனா தொற்றியதா அல்லது பிறந்த சிறிது நேரத்தில் கொரோனா தொற்றியதா என்பது இன்னமும் மருத்துவர்களுக்கு குழப்பமாகவே உள்ளது.
ஆய்வை தலைமையேற்று நடத்தும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரான Marian Knight, பிறந்த பிறகுதான் அந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்றியிருக்கும் என தான் நம்புவதாக் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதை தன்னால் உறுதியாக கூற முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
தற்போது அவரது தலைமையிலான குழு, குழந்தைகளுக்கு எப்படி கொரோனா பரவுகிறது என்பதை அறிய அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை ஆராய்ந்து வருகிறது.
அத்துடன் முக்கிய கண்டுபிடிப்பாக தாய்ப்பால் மூலம் கொரோனா பரவுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் பேராசிரியர் Knight.