கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது ஆசியர்களுக்கு எதிரான இன பாகுபாடு மற்றும் வன்முறையை மேற்கோளிட்டு சீனா தனது குடிமக்களுக்கு அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
சீன கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால், அவுஸ்திரேலியாவில் சீன மற்றும் ஆசியர்களுக்கு எதிரான இன பாகுபாடு மற்றும் வன்முறைச் செயல்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
சீன சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிப்பதைத் தவிர்க்கவும் அமைச்சகம் அறிவுறுத்துகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என அவுஸ்திரேலியா முடிவெடுத்ததைத் தொடர்ந்து சீனா பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.