லாஸ் ஏஞ்சல்சில் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலரிடம் பொலிசார் அத்துமீறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்சில் சிலர் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கின்றனர். அவர்களில் கலிபோர்னியா பல்கலைக்கழக பட்டதாரியான Laura Montilla (22)வும் ஒருவர்.
6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென 5 மணிக்குமேல் ஊரடங்கு என அறிவித்துள்ளனர் பொலிசார்.
மக்கள் அமைதியாக கலைந்து செல்லவும், சிலர் தலை கவிழ்ந்து தரையில் படுத்திருந்த நிலையிலும் பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
ஆண்களையும் பெண்களையும் தனியாக பிரித்து வேன்களில் ஏற்றியுள்ளனர். பிளாஸ்டிக் பைகளை இறுகக் கட்ட பயன்படுத்தும் ஜிப் லாக் கொண்டு பின்பக்கமாக கைகளை இறுகக்கட்டியுள்ளனர்.
பின்னர் அவர்கள் சத்தமிடுவது வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக சத்தமாக இசையை ஒலிக்க செய்துள்ளனர்.
ஒரு கல்லறைப்பகுதியில் கொண்டு ஒரு மணி நேரம் வைத்துவிட்டு, போக்குவரத்து வசதியில்லாத ஒரு இடத்தில் கொண்டு இறக்கிவிட்டு விட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார் Laura.
இதற்கிடையில், தன் பாக்கெட்டை பரிசோதித்ததை விட தன் பெண்ணுறுப்பை அந்த பொலிசார் அதிக முறை சோதித்தார்கள் என்கிறார் Laura வேதனையுடனும் கோபத்துடனும்.
கைகள் பின்பக்கமாக கட்டப்பட்ட நிலையில், தன் பொருட்களையெல்லாம் வாங்கிக்கொண்ட பின்னரும் ஐந்து முறை தன் உடைகளை அகற்றி தன் பெண்ணுறுப்புக்குள் அந்த பொலிசார் சோதனையிட்டதாக தெரிவிக்கும் Laura, தாங்கள் கேள்வி கேட்க முயன்றபோது துப்பாக்கியைக் காட்டி தன்னை மிரட்டியதாக தெரிவிக்கிறார்.
அமெரிக்காவில் ஜார்ஜ் பொலிசாரால் கொல்லப்பட்டபின்பு, போராட்டங்கள் வெடித்த நிலையிலும், பல இடங்களில் பொலிசாரின் அட்டூழியங்கள் குறைந்தபாடில்லை.
ஒரு முதியவரை தள்ளிவிட்டு அவர் மண்டை உடைந்ததற்காக பொலிசார் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால், அவர்களுடன் பணிபுரியும் அத்தனை பொலிசாரும் வேலையை ராஜினாமா செய்கிறார்கள். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை அமெரிக்காவில்!