சீனாவில் மனைவியை கொலை செய்துவிட்டு பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த கணவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அந்த நபர் தூக்கிலிடப்பட்டதாக n-நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஷாங்காயை சேர்ந்தவர் Zhu Xiaodong(30). இவருக்கும் 30 வயது மதிக்கத்தக்க Yang Liping என்பவருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதி ஷாங்காயின் ஹாங்காவ் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக Zhu Xiaodong மனைவியான Yang Liping-ஐ கொலை செய்துவிட்டு, அவருடைய போன் மூலம் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அவர் உயிரோடு இருப்பது போன்று பேசி வந்துள்ளார்.
இறந்த Yang Liping உடலை ஒரு சிவப்பு போர்வையில் போர்த்தி, வீட்டின் பால்கனியில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் மூன்று மாதங்களாக, சுமார் 105 நாட்கள் மறைத்து வைத்துள்ளார்.
அதன் பின் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் திகதி இரவு தனது பெற்றோரை அழைத்து நடந்த விஷயங்களை அனைத்தையும் கூறிவிட்டு பொலிசில் சரண் அடைந்துள்ளார்.
இதையடுத்து ஷாங்காய் எண் 2 இடைநிலை மக்கள் நீதிமன்றத்தில்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் திகதி Zhu Xiaodong நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டவுடன், சட்டத்தின் என்ன தண்டனை கொடுத்தாலும், நான் ஏற்க தயார் என்று கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் இரண்டாவது விசாரணையிலே Zhu Xiaodong கொலை செய்யப்பட்ட குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டார்.
அதுமட்டுமின்றி மனைவியை கொலை செய்து, அவரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 3 மாதங்கள் மறைத்து வைத்திருந்ததை நீதிமன்றம் மேற்கோள் காட்டியும், மனைவியான Yang Liping-ன் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 45,000 யுவான் மதிப்பு கொண்ட பணத்தை மாற்றியுள்ளதுடன், கிரெடிட் கார்டை ஆடம்பரமாக பயன்படுத்திருப்பதும் தெரியவருகிறது.
அதுமட்டுமின்றி சீனாவிலும், வெளிநாட்டிலும் 100,000 யுவானுக்கு மேல் செலவு செய்துள்ளார். பொலிசாரின் விசாரணையில், வெவ்வேறு பெண்களுடன் ஹோட்டலில் ஜாலியாக இருந்துள்ளார். இதற்கு Yang Liping-ன் அடையாள அட்டையை பயன்படுத்தியுள்ளார்.
இதனால் இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது என்பதால் Zhu Xiaodong-க்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் படி கடந்த வியாழக்கிழமை Zhu Xiaodong தூக்கிலிடப்பட்டதாக ஷாங்காய் எண் 2 இடைநிலை மக்கள் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.