அமெரிக்காவின் சியாட்டிலில் இனவெறிக்கு எதிரான போராட்டத்திற்குள் கார் ஒன்று பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் மினியாபோலிஸ் பொலிசாரால் ஜார்ஜ் ஃபிளாய்டின் என்ற கருப்பினத்தவர் கொல்லப்பட்டதால் அமெரிக்க மட்டுமின்றி உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சியாட்டிலில் நடந்த போராட்டத்தில் நபர் ஒருவர் தனது காரை போராட்டகாரர்கள் மீது மோதியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் காரைச் சுற்றி வளைத்த போது சந்தேக நபர் தனது காரிலிருந்து வெளியேறி, துப்பாக்கியை எடுத்து போராட்டகாரர்களை பயப்படும்படி செய்துள்ளார்.
அவரை தடுக்க முயன்ற போராட்டகாரர் ஒருவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியதாக பொலிஸ் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
சுடப்பட்ட நபரை தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் வேறு யாருக்கும் காயமடையவில்லை என சியாட்டில் பொலிசார் தெரிவித்தனர்.
A suspicious man drove into a crowd of protesters in Seattle.
After the man has been off the car, he has shot on several people.
One person was shot which is in stable condition. The Assassin was arrested by law enforcement.#Seattle #seattleprotestpic.twitter.com/EgtNDP7wGd
— ISCResearch (@ISCResearch) June 8, 2020