இந்தியாவுடனான எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், சீனாவை சேர்ந்த பிஎல்ஏ இராணுவப் படை மிகப் பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனா இருநாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சனை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதில், இந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அமைதிக்கான முதல் படியாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய திருப்பமாக சீனாவை சேர்ந்த People’s Liberation Army(PLA) இராணுவ படை நேற்று மிகப்பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
குறித்த இராணுவ படைத்தான் சீனாவின் முன்னணி இராணுவ பிரிவு ஆகும். இவர்கள் நேற்று மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டனர். பல்லாயிரம் வீரர்கள் ஒன்றாக சேர்ந்து பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
சீனாவுடன் இந்தியா எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையில் சீனா இப்படி படைகளை வைத்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மத்திய சீனாவில் இருந்து லடாக் எல்லைக்கு எவ்வளவு வேகத்தில் படைகளை அனுப்பலாம் என்பதை ஆராயவும், படைகள் தயாராக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவும் சீனா இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா சமீப நாட்களில் செய்த மிகப்பெரிய பயிற்சி இதுதான், சீனா இந்த பயிற்சியை சரியாக எங்கே செய்தது என்று விவரங்கள் வெளியாகவில்லை.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக படைகளை அனுப்பி உள்ளனர். அவர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க இப்படி செய்துள்ளது.
இந்த சீன வீரர்கள் சீனாவின் போர் விமானம், ரயில், பேருந்து என்று பல வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு, எவ்வளவு வேகமாக வீரர்களை இடமாற்றம் செய்ய முடியும் என்று சீனா இராணுவம் கண்டுபிடித்துள்ளது.
லடாக்கில் பிரச்சனை வந்தால் உடனடியாக வீரர்களை எல்லைக்கு அனுப்ப வசதியாக சீனா இப்படி சோதனையை செய்துள்ளது. இதில் நவீன ஆயுதங்களையும் இப்படி கொண்டு சென்று இருக்கிறார்கள்.
எல்லை பேச்சுவார்த்தைக்கு பின் லடாக்கில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீனா தனது தயார் நிலை குறித்து சோதனை செய்து வருகிறது.
அமைதியை விரும்பும் ஒரு நாடு ஏன் தயார் நிலை குறித்து சோதிக்க வேண்டும். ஏன் படைகளை வேகமாக அனுப்ப முடியுமா என்று ஆராய வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.