2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் கொரோனா வைரஸுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று பிரான்சின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பிரான்ஸ் பொருளாதாரம் சுமார் 10% சரிந்துவிடும், வேலையின்மை அடுத்த ஆண்டுக்குள் 11.5% க்கு மேல் உயரத்தை எட்டும் என்று பிரான்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.
பிரான்சின் ஊரடங்கு தளர்த்தலின் இரண்டாம் கட்டம் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது, இதில் 100 கிமீ பயண வரம்பு முடிவுக்கு வந்தது. பல பார்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர், கொரோனா தொற்றுநோய் பிரான்சில் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறினார்.
பிரான்சில் தற்போது வரை கொரோனாவால் 29,209 பேர் பலியாகியுள்ளனர், நாடு முழுவதும் சுமார்1,54,188 பேருக்கு கொரோனா உறுதியானது என நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.