பொது வெளியில் நளினிக்காக சுமந்திரன் பகிரங்க சண்டையிட்ட பரபரப்பு காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
தனியார் வானொலி நேரலை நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்ட சுமந்திரன் இது தொடர்பில் வாதிட்டுள்ளார்.
நளினி ரட்ணராஜா தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்கள் கூறியபோது அவரிடம் சுமந்திரனிடம் பகிரங்க மன்னிப்பு கோரியமை தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு பகிரங்கமாக சண்டையிட்டுள்ளார்.
அத்துடன் சிங்கள ஊடகத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில் போராட்டம் தொடர்பில் தான் எதுவும் கூறவில்லை எனவும் சுமந்திரன் இதன்போது அடித்துக் கூறியுள்ளார்.
இதேவேளை சிங்கள ஊடகத்தில் செவ்வி வழங்கியபோது மிகவும் பணிவாக நடந்துகொண்ட சுமந்திரன் , ஒரு தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவ்வாறு நடந்துகொள்ளாமல் பகிரங்கமாக சண்டையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.