எமது தேசத்தை நேசித்த, பொன்னாலையின் மிகச்சிறந்த கல்விமான் மதிப்பார்ந்த சிவகுருநாதன் ரங்கராஜா அவர்கள் இன்று (2020.06.15) இறைபதம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர் பிருந்தாபன் பொன்ராசா மூகநூலில் தெரிவித்துள்ளார்.
உயர் பதவியில் இருந்தபோதிலும் எமது தேசத்திற்கு எதிரான சூழ்ச்சிகளால் மனம் உடைந்துபோனவர். தமது ஆற்றாமையை வெளிப்படுத்தியவர். இழக்கக்கூடாத நேரத்தில் அவரை இழந்திருக்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாளை வேண்டுகின்றேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.