கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
42 வயதான ஒலினா ஜெலென்ஸ்கி-க்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவரது கணவரும் உக்ரைனின் ஜனாதிபதியுமான வோலோடிமைர் மற்றும் தம்பதியின் இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா இல்லை என சோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில், இன்று காலை ஜெலென்ஸ்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது, அங்கு அவர் ஒரு நிலையான நிலையில் இருப்பதாகவும், கூடுதல் ஆக்ஸிஜன் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜனாதிபதியின் மனைவி தனிமையில் இருக்கிறார் மருத்துவர்கள் அவரை கவனித்து வருகின்றனர் என்று ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் உக்ரேனில் புதிய கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.