இந்திய- சீனா எல்லையில் இரு நாட்டு இராணுவத்தினர் இடையே நடந்த மோசமான கைகலப்பில் வீரர்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், சீனா தங்கள் இராணுவ பலத்தை காட்ட புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
திபெத்திய பகுதியில் நடைபெற்ற சீன இராணுவத்தின் அணிவகுப்பையும் போர் பயிற்சியையும் அந்த வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளது.
அதில் சுமார் 7,000 சீன இராணுவத்தினர் போர் பயிற்சியில் கலந்து கொள்வதாகவும், ஆயுத பலத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
கால்வன் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் கர்னல் உட்பட 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்,
தற்போது சீனாவும் தங்கள் தரப்பில் 43 பேர் பலியானதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இது திங்களன்று நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களா என்ற தகவலை சீனா ராணுவம் உறுதி செய்ய மறுத்துள்ளது.
திங்களன்று இரவு நடந்த மோதலில் இரு தரப்பினரும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை, ஏனெனில் சமாதான உடன்படிக்கையின் கீழ் இரு தரப்பினரும் சர்ச்சைக்குரிய எல்லையிலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனால் கொல்லப்பட்ட இராணுவத்தினர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளதும், பலர் கால்வன் ஆற்றில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
கால்வன் ஆற்றில் விழுந்தவர்கள் உயிர் தப்புவது கடினம் என்பதால், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதனிடையே டெல்லியில் அதிகாரிகள் தரப்பு இந்த மோதலுக்கு பழிவாங்க வேண்டும் என்று கோரியதால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘வீரர்களின் தியாகம் வீணாகாது என்று எச்சரித்துள்ளார்.
மேலும், இந்தியா சமாதானத்தையே விரும்புகிறது, ஆனால் மோதல் போக்கு நீடித்தால் அது நிலைமை எதுவாக இருந்தாலும் பொருத்தமான பதிலை அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே சீனா நாட்டின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை போர் பயிற்சிக்கு உட்படுத்தியுள்ள வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது.