பிரித்தானியாவில் நடந்த கத்தி குத்து தாக்குதலில், மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை நடத்தியவன் லிபியா நாட்டை சேர்ந்தவன் என்றும், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதும் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் பூங்காவிற்குள் புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்ட மக்களைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி, 25 வயதி மதிக்கத்தக்க நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரிட ம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் Saadallah என்பதும், அவரது மன பிரச்சனைகள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள Whitley-யில் அந்த நபர் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, அவருக்கு அருகில் வசிக்கும் அக்கம் பக்கத்தினர் நம்பியுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்த பயங்கர வாத சம்பவம் காரணமாக மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் Fishmongers’ Hall-ல் நடந்த கத்தி குத்து சம்பவம், ஜனவரி மாதம் HMP Whitemoor சிறை மற்றும் பிப்ரவரியில் Streatham ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களில் நடந்த நான்காவது பயங்கரவாத கத்தி குத்து தாக்குதல் இது ஆகும்.
தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறையின் தலைமை கான்ஸ்டபிள் ஜான் காம்ப்பெல் கூறுகையில், நேற்றிரவு நடந்த சம்பவங்களால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
இது உண்மையிலேயே ஒரு சோகமான சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவர் மீதும் ஆழ்ந்த எண்ணங்கள் உள்ளன.
இந்த வகையான சம்பவங்கள் மிகவும் அரிதானவை, இருப்பினும் இது குறித்து கவலையைப் புரிந்துகொள்வதையும் நான் அறிவேன் என்று தெரிவித்துள்ளார்.



















