அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் Minneapolis பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 11 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் இன்று அதிகாலை தெரிவித்துள்ளனர்.
முதலில் Minneapolis பொலிசார் 10 பேர் காயங்களுடன் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறியிருந்தனர். அதன் பின் அதிகாலை 3 மணிக்கு பிறகு இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த பகுதி மினியாபோலிஸ் வணிகப் பகுதியிலிருந்து மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது எனவும், கருப்பினத்தவர் ஜார்ஜ் பிலாய்ட்ஸ் மரணத்தைத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதி என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இங்கு ஒருவருக்கொருவர் துப்பாக்க்சியால் சுட்டுக் கொண்டதாக கூறப்பட்டாலும், பொலிசார் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து வெளியிடவில்லை.
முதற்கட்ட விசாரணையில், அதிகாலை 12:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். ஆனால், பலியானவர்கள் அடையாளம் காணப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து பேஸ்புக்கில் வெளியாகியிருக்கும் வீடியோவில் மக்களின் அலறல் சத்தம் கேட்கின்றது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதும், நடைபாதையில் ரத்தம் சிந்தி கிடப்பதும் வீடியோவில் காணப்பட்டது.




















