நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பல நடைமுறைகளை அமுல்படுத்தி உள்ளது. அதில் ஒன்று அனைவரும் சமூக விலகலை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்த நிலையில் வடக்கில் தற்பொழுது ஆலயங்களில் மகோற்சப பெருவிழாக்கள் ஆரம்பமாகியுள்ளது.
எனினும் ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பல அடியவர்கள் ஆலயங்களில் நேர்த்திக்கடன்களை முடிக்கமுடியவில்லையே என கவலையுடன் உள்ளார்கள்.
இதேவேளை தெற்கில் மட்டும் அவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. ஜானதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளும் அதற்கு விதிவிலக்கல்ல.
அந்தவகையில் நேற்று முன் தினம் ஜனாதிபதியின் பிறந்த நாளன்று படைகள் சூழ அவர் விகாரைக்கு சென்றுள்ளார்.
ஆனால் வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மகோற்சப பெருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையில் , ஆலயத்தினுள் செல்லும் அடியார்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதனால் அவர் வீதிகளில் நின்று நாகபூசணி தாயை வழிபட்டனர்.
இந்த நிலையில் வடக்கில் ஆலயங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டுமென கூறி மட்டுப்படுத்தப்பட்டவர்களையே அனுமதித்த அரசாங்கம் தெற்கில் மட்டும் இவ்வாறு செல்வது எந்தவகையில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.























