நடிகர் அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா. இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு நடனம் ஆடியதால் மூலம் பிரபலமானார்.
நடிகை மாளவிகா ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாளவிகா, சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது எனக்கு நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக மாளவிகா தெரிவித்துள்ளார் .
சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்ததை வழக்கமாக கொண்டுள்ளார். மாளவிகா தற்போது ஃபேஸ் ஆப் மூலம் தன்னை ஆணாக மாற்றி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் அவரா இது என மிகுந்த ஆச்சரியமுடன் பார்த்து வருகின்றனர். ஒரு சில நீங்களா எப்படி இருக்கீங்க என்று கமெண்ட் செய்துவருகிற்னர்.




















