90-களில் இருந்து இன்று வரை உலகம் முழுவதும் ரெஸ்லிங் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றவர் டெட்மேன் அண்டர்டேக்கர். மார்க் வில்லியம் காலவே என்ற தனது பெயரை உ ரெஸில்ங்கிற்காக அண்டர்டேக்கர் என மாற்றி கொண்டார்.
90களில் வாழ்ந்த சிறார்கள் அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர் இருப்பதாகவும், அவரை எத்தனை முறை கொன்றாலும் திரும்ப உயிரோடு வருவார் என்றும் ஒரு நம்பிக்கை 90 கிட்ஸ்களை அப்போது இருந்தே பிரமிக்க வைத்திருந்தது.
இந்த நிலையில், WWF போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற அண்டர்டேக்கர் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
அவருக்கு வயது 55 ஆகிறது. ஓய்வுக்கு பிறகு அமைதியான வாழ்க்கை வாழப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
”தி லாஸ்ட் ரைட்” ஆவணப்படத்தில், கடந்த ஆண்டு கோல்பெர்க்கிற்கும் அண்டர்டேக்கரும் நடைபெற்ற சண்டையில் கரணம் தப்பினால் மரணம் என்னும் அளவிற்கு உயிரை பிடித்துக்கொண்டு தப்பித்துள்ளார் இந்த டெட் மேன்.
கோல்ட்பெர்க் அண்டர்டேக்கரை தூக்கி கீழே போடும்போது சுதாரித்துக்கொண்டிருக்கவில்லை என்றால் அண்டர்டேக்கரின் தலை தரையில் பட்டு சாவை பார்த்திருப்பார் என்று அவரே சொல்கிறார்.
சாவிற்கு மிக அருகில் சென்று வந்த அந்த மேட்ச்சிலிருந்துதான் ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை தான் உணர்ந்ததாகவும் தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை நிராதரவாக நிற்க விட மனம் வரவில்லை என்றும் எமோஷனலாக பேசியுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக மல்யுத்தத்தின் மூலம் ரசிகர்களை மிரள வைத்த அண்டர்டேக்கர், தற்போது சாவின் விழிம்பு வரை சென்று மீண்டும் ஒரு முறை பிறந்திருக்கிறார்.
மேலும், அண்டர் டேக்கர் 3 முறை Heavy weight Champion, 6 முறை Tag Team Champion மற்றும் ராயல் ரம்புள் உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
1987-ம் ஆண்டு உலகத்தர சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டு தனது மல்யுத்த வாழ்க்கையை தி அண்டர்டேக்கர் துவங்கினார். பின்னர் 1990களில் இருந்து WWE போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
உலகம் முழுக்க இவர் மிகப்பிரபலமாக இருந்தாலும், தனது சகாக்களான ஜான் சீனா மற்றும் தி ராக் ஜான்சன் போல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இல்லை.
ஆனாலும், ராக், படிஸ்டா போல அவர் சினிமாவில் நடிக்க வந்தால் பார்க்க ஆவலாய் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.