பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு மகனாக நடித்திருந்த அஸ்வின், வந்தான் வென்றான், கும்கி, தில்லு முல்லு உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
கும்கியில் தம்பி ராமையாவுடன் நகைச்சுவைக் கூட்டணி அமைத்து அசத்தியிருந்த அஷ்வினை அந்தப் படத்துக்கு பின்னர் பலரும் கும்கி அஷ்வின் என்றே அழைத்து வந்தனர்.
இந்நிலையில், கொரோனால் லாக்டவுன் சமயத்தில், இவரும் சென்னைக் கே.கே.நகரைச் சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யா ஸ்ரீயும் காதலித்து வந்தனர்.
வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் எம்.எஸ் படித்து முடித்துள்ளார். இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து தற்போது திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இதில் திரையுலக நண்பர்கள் யாருமின்றி அஸ்வின் – வித்யாஸ்ரீ இருவரது குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழக அரசு விதித்திருக்கும் விதிமுறைகளை கடைபிடித்து இத்திருமணம் நடைபெற்றுள்ளது.
ஊரடங்கு அமலில் இருப்பதால் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத திரைபிரபலங்கள் பலரும் அஸ்வின் – வித்யா ஸ்ரீ தம்பதிக்கு போனிலும் சமூகவலைதளங்களின் வாயிலாகவும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.