எந்தக் காலத்திலும் கண்டிராத ஒரு இராணுவ ஆட்சி ஏற்பட போகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று உடுப்பிட்டி மற்றும் பருத்தித்துறை தொகுதி செயற்பாட்டாளருக்கான வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாற்று அணி என தம்மை தெரிவிப்பவர்கள் குறைந்தது ஐந்து ஆசனத்தையாவது பெற முடியுமா எனவும் அவ்வாறு மாற்று அணி என்று குறிப்பிடுபவர்கள் தமிழ் மக்களை சின்னாபின்னமாக்கி சிதைக்கின்றவர்கள் என அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஒரு அரசிய் தீர்வு கிடைக்க வேண்டும் என்று முழுமையாக உழைத்தோம்.
அது ஒட்டு மொத்த சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் சிங்கள மக்களுக்கு எமது நியாயப்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்கள் கேட்பது நியாயம் தானே என சிங்கள மக்கள் உணரும் அளவிறக்கு தலைவர் சம்மந்தர் ஐயா எதிர்கட்சி தலைவராக இருக்கின்ற காலத்தில் செயற்பட்டார்.
அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் ஒரு அவுஸ்திரேலியா ஊடகம் ஒரு கேள்வியை கேட்டது. சுமந்திரன் மட்டும் தான் சிங்கள மக்களிடம் தமது கருத்துக்களை சொல்கிறார் உங்கள் கட்சி சார்பில் ஏன் இதனை செய்யவில்லை என்று. அதற்க்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்கு மூன்று மொழிகளும் தெரியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியாக இருக்கின்றபோது அதனை செய்திருக்கின்றோம் என்றும்,
தற்போது எமது கட்சியில் சட்டத்தரணி காண்டீபன் இருக்கின்றார் அவர் அதனை செய்வார் என்றும், ஆயுதம் ஏந்திப் போராடாத நான் அதனை சொல்லி வாக்கை பெறுவது அவர்களது தியாகத்தையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் மக்களுக்கு தீர்வு வேண்டும் என்றால் இங்கே பேசுவதை சிங்கள மக்கள் மத்தியிலும் பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்படி வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு வடமராட்சி நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கல்யாண மண்டபத்தில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலமையில் இடம் பெற்றது.
இதில் தமிழரசு கட்சி வேட்பாளர்களும், பருத்தித்துறை, உடுப்பிட்டி தொகுதி தமிழரசு கட்சி நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள், பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் ச.அரியகுமார், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் திரு ஐங்கரன், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் திரு இருதயராசா என சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.