எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றின் கூரையில் வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றது.
இச்சம்பவம் ஜூன் 26 2020 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில், Valmy-Le Moulin நகரில் A4 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது. இது ஒரு ‘நம்பமுடியாத’ விபத்து என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விபத்தில் எவரும் காயமடையவில்லை.வாகனங்களை ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. நிலையத்தின் கூரையும் சேதமடைந்துள்ளது.






















