கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 1214 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணியாமல் பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நேற்று முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















