இலங்கையின் வானிலையில் இன்று மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான மையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.


















