சீனாவில் காது வலி மற்றும் தொடர் நமச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த பெண் ஒருவரின் காதை மருத்துவர்கள் சோதித்து பார்த்த போது, காதின் உள்ளே இருந்து கரப்பான் பூச்சியை வெளியே எடுத்துள்ளனர்.
தெற்கு சீனாவின் Guangdong மாகாணத்தை சேர்ந்த Chen என்று அறியப்படும் பெண் ஒருவர் காது வலி மற்றும் தொடர் நமச்சல் காரணமாக கடந்த புதன் கிழமை அங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் காதை சுத்தம் செய்வதற்காக, ஒரு குச்சியை காதின் உள்ளே விட்டால், ஒரு வித தீவிர நமச்சலை உணர்வதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து மருத்துவர்கள் சோதனை செய்த போது, அவரின் காதில் ஒரு கரப்பான் பூச்சி இருப்பதை கண்டுள்ளனர்.
அதை வெளியில் எடுப்பதற்காக otoscope முறையை பயன்படுத்தி வெளியில் எடுத்துள்ளனர். அது மஞ்சள் கலர் கரப்பான் பூச்சியாக இருந்துள்ளது.
இது குறித்து மருத்துவர் Yi கூறுகையில், otoscope முறையை பயன்படுத்தி வெளியில் எடுத்தோம். சரியான நேரத்தில் இதை வெளியில் எடுக்கவில்லை என்றால் பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் Chen காதில் இருந்து கரப்பான் பூச்சி எடுக்கப்பட்டதை நினைத்து திகிலடைந்தார். நான் என் காதுக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்க முடியவில்லை.
இருப்பினும் நான் குச்சியை காதின் உள்ளே செலுத்தினால், ஏதோ ஒன்று இன்னும் ஆழமாக ஊர்ந்து செல்வதை உணர முடிந்தது, என்று Chen கூறியுள்ளார்.
கரப்பான் பூச்சி அவர் தூங்கும் போது காதின் உள்ளே நுழைந்திருக்கலாம் என்று நம்ப்படுவதால், பூச்சிகளை விரட்டும் மருத்துகளை அடிக்கடி வீட்டில் பயன்படுத்தும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.