ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பான அறிவிப்பை வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில், சீனா கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பிரித்தானிய அரசு முன்வந்துள்ளது. இதன்படி ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு, பிரித்தானியா பார்லிமெண்ட்டில், விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக பார்லிமென் நிகழ்ச்சி நிரலில், ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம் , அதற்கு பிரித்தானியா பதிலடி என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் நடவடிக்கை மனித உரிமை மீறல் எனவும், இந்த சட்டத்தை கொண்டுவந்ததற்காக சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சில பிரித்தானிய எம்.பி.,க்கள், வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப்பை வலியுறுத்தியுள்ளனர்.
ஹாங்காங்கின் அரசியல் வடிவமைப்பை மாற்றும் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, ஜி7 நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை முடிவு செய்துள்ளன.
1977-ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு பிரித்தானியா பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது.
ஹாங்காங்கில், பலத்த எதிர்ப்பையும் மீறி, சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினால், பிரித்தானியா விசா அமைப்பில், மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவேன் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.