எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள், யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் இவை எதுவும் தேர்தலை பிற்போட காரணமாக அமையாது என்றும் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டிருந்தாலும் அவற்றைத் தடுக்க சுகாதாரப் பிரிவினர் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வேட்பாளர்களைப் போல, வாக்காளர்களும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் இவ்வாறு பின்பற்றினால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.