பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது கொழும்பு முதல் இரத்தினபுரி வரையிலான அதிவேக வீதிக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் சுரங்கத் தொழிலாளர்கள் குறித்த அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் ஒரு நிறுவனத்தின் ஊடாக வழங்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்வேன்” என அவர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை அவிசாவளை முதல் ஓப்பநாயக்க வரையிலான பழைய ரயில் மார்க்கத்துக்குரிய இடங்களில் வசிக்கும் 35,000 இற்கும் மேற்பட்டோருக்கு சட்டரீதியான காணி உரிமம் இல்லாமை குறித்தும், இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.