ப்ளோரிடாவில் தன்னை விட உயரமாக இருக்கும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை பட்டப்பகலில் திருடிச் செல்லும் ஒரு பெண் கமெராவில் சிக்கியுள்ளார்.
அந்த பெண், பல சிறிய பொருட்களை திருடிக்கொண்டு, கூடவே ஒரு 65 இஞ்ச் பிலிப்ஸ் தொலைக்காட்சியையும் எடுத்து தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியேறியுள்ளார்.
எல்லார் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு வெளியேறும் நிலையில், வெளியில் நின்றிருந்த பாதுகாவலர் அந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கான ரசீதைக் கேட்டுள்ளார்.
ஏதேதோ கூறி சமாளித்துவிட்டு அந்த பெண் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க, அவருடன் வந்த மற்றொரு பெண், ஏற்கனவே திருடப்பட்ட சிறிய பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.
இதை பொலிசாரிடம் புகாராக அளித்தபோது அவர்களால் இதை நம்பவே முடியவில்லையாம். தற்போது CCTV கமெரா காட்சிகளின் அடிப்படையில் அந்த பெண்ணை பொலிசார் தேடிவருகிறார்கள்.



















