கொரோனா வைரஸை அமெரிக்க ஜனாதிபதி கையாளுதலை விமர்சித்த அமெரிக்காவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சி உறுப்பினர் நான்சி பெலோசி கொரோனா வைரஸை ‘டிரம்ப் வைரஸ்’ என்று அழைத்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்கர்களை முகக்கவசங்களை அணியுமாறு கேட்டுக் கொண்டதும், அமெரிக்காவின் நிலைமை ’மேம்படுவதற்கு முன்பு மோசமடையக்கூடும்’ என்று கூறியதை தொடர்ந்து நான்சி பெலோசியின் கருத்துக்கள் வந்துள்ளன.
இன்று ஜனாதிபதியின் கருத்துக்களின் மூலம் அவர் செய்த தவறுகளை உணர்ந்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன்.
தற்போது முகக்கவசம் அணிவதை ஏற்றுக்கொண்டார் மற்றும் கொரோனா புரளி இல்லை என அடையாளம் கண்டுள்ளார். அவரது செயலற்ற தன்மையால் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்பு மோசமாகிவிட்டது என ஹவுஸ் சபாநாயகர் பெலோசி விமர்சித்தார்.
உண்மையில், இது டிரம்ப் வைரஸ் தான் என்று அவர் கூறினார். கொரோனா ‘சீனா வைரஸ்’ என்று அழைத்ததற்காக விமர்சிக்கப்பட்ட டிரம்ப்பை அவரது சொற்றொடர் எதிரொலித்தது.



















