வீட்டுல் உள்ள டைனிங் டேபிளில் உணவு உண்டபின் தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை முறையாக எடுத்து வைக்காமல் சென்ற கணவனை, மனைவி விவாகரத்து செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக தம்பதிகள் மனஸ்தாபம், புரிதல் இண்மை உள்ளிட்ட காரணங்களுக்காக விவாகரத்துப் பெருவது என்பது இந்த உலகில் வழக்கமாக இருந்து வருகிறது. இன்னும் சில வழக்குகளில் என்னதான் கணவன் மணைவிக்கும் சண்டை அவர்கள் விவாகரத்து செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்வதையும் நம்மால் காணமுடிகிறது. ஆனால் வீட்டில் உணவு உண்டபின் தட்டு, டம்பளர் உள்ளிட்ட பொருட்களை முறையாக எடுத்துவைக்காமல் சென்றதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவனை பெண் ஒருவர் விவாகரத்து செய்துள்ளார்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த மேத்திவ்ஸ் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது 13 வருட குடும்ப வாழ்க்கையில் அவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். அனைவரது குடும்ப வாழ்க்கையை போலவே அவர்களது வாழ்விலும் சுக துக்கங்கள் அனைத்தும் வந்து சென்றன. ஆனால் அவர்களுக்கும் இருந்த ஒரு சிறிய மனகசப்பு விவாகரத்து வரை கொண்டு சென்றது. பொதுவாக கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவது என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதேபோல் இந்த தம்பதியனருக்கும் சண்டைகள் வந்துள்ளன. ஆனால் அவை சற்று வித்தியாசமானதாக இருந்துள்ளன. அவை வீட்டில் எடுத்த பொருட்களை சரியான இடத்தில் வைக்காததற்கான சண்டைகள். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேத்திவின் மனைவி விவாகரத்து செய்து பிரிந்து சென்றார்.
இதனை அடுத்து மேத்திவ் தனது குடும்ப வாழ்க்கை பிரிவு தொடர்பாகவும் கணவன் மணைவிக்குள் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் தனது வலைதளப்பக்கத்தில் எழுதியுள்ளார்.