முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால், மூன்று மாத கடின உழைப்பு தண்டனையாக வழங்க, வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றுநோய், 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைக்கிறது. ஆனால், தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என வடகொரியா கூறி வருகிறது.
இந்நிலையில், வடகொரியாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால், அபராதம் மற்றும் தண்டனையாக மூன்று மாத கடின உழைப்பை அந்நாட்டு அரசு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.