வட அமெரிக்காவில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவின் மலைப்பிரதேசத்தில் உள்ள சிக்விஹூயிட் குகைகளில் சிறிய கற்களால் ஆன ஆயுதங்கள் உள்பட 1,930 சுண்ணாம்பு கருவிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடுத்தனர். இந்தக் கருவிகள் 31,000 முதல் 12,500 ஆண்டுகள் வரை பழமையானது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பகுதியில் வேட்டையில் ஈடுபடும் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாக கூறுகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் வட அமெரிக்காவை சுற்றியுள்ள 42 பகுதிகளில் மேலும் சில சான்றுகள் கிடைத்ததாகவும் கூறுகின்றனர். இவற்றை வைத்து பார்க்கும் போது 30,000 ஆண்டுகளுக்கு முன்பே வட அமெரிக்காவில் மக்கள் வாழ்ந்துள்ளதாக தெரிகிறது. 13,000 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வட அமெரிக்காவிற்கு வந்ததாக கூறி வந்த நிலையில், தற்போதைய ஆய்வுகள் அதற்கு முரணான முடிவுகளை தெரிவிக்கின்றன.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே அந்த காலகட்டத்தில் வட அமெரிக்காவிற்கு வந்திருக்கக் கூடும் என கணித்துள்ளனர். இந்த ஆய்வை மேலும் தீவிரப்படுத்தும் பணியில் ஆராச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.