எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடுமென முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய எந்த நிலைமையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தயார் நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லை.
இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் ஏற்படலாம். இதேவேளை டெங்கு நோயின் தாக்கமும் அதிகமாகலாம்.
இவற்றுக்காக அரசாங்கத்தின் தயார் நிலைகள் போதுமானதாக இல்லை. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவற்றுக்கான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.