பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் தொடர்பில் வெளிவரவிருக்கும் புதிய புத்தகம், பிரித்தானிய அரச குடும்பத்தை வேறுபட்ட கோணத்தில் அலசியிருப்பதாக கூறப்படுகிறது.
பிரித்தானிய அரச குடும்பத்தை இளவரசர் ஹரி மற்றும் மேகனின் பார்வையில் புதிய புத்தகம் அலசுவதாக வெளியான தகவலை, அவர்களின் சார்பில் தற்போது மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிரித்தானிய அரச குடும்பத்தில் கடும் சிக்கலை ஏற்படுத்தும் என நம்பப்படும், இந்த புதிய புத்தகம் கண்டிப்பாக, ஹரி மற்றும் மேகன் தம்பதிகளுக்கு மிக நெருக்கமானவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டதாக இருக்கவே வாய்ப்பு என கூறப்படுகிறது.
மேகன் மெர்க்கலை பொறுத்தமட்டில், அரண்மனையில் தாம் தனித்துவிடப்பட்டேன், கர்ப்பமாக இருக்கும்போது பாதுகாப்பின்மையை உணர்ந்தேன் என சூசகமாக தெரிவிக்கப்பட்டதன் காரணங்கள் புதிய புத்தகத்தில் அலச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அரண்மனையில் இருந்து இளவரசர் ஹரி வெளியேற என்ன காரணம என்பதையும் விரிவாக அலசப்படலாம்.
அரண்மனையில் யாரை நம்புவது என்ற கேள்வியே மேகன் மெர்க்கலை பல நாட்கள் குழப்பியதாகவும்,
அவரது உதவிக்கு பணியமர்த்தப்பட்ட முக்கிய நபர்களிடம் இருந்து அரண்மனைக்கு உள்ளேயே விலகியிருக்க அவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களான ராணியார் உட்பட்ட எவரும் தங்கள் குடும்ப பிரச்சனைகளை அரண்மனை ஊழியர்களின் உதவியை நாடாமல் திறம்பட தீர்த்துவைத்ததில்லை எனவும்,
முக்கியமாக அரண்மனையில் எவருக்கும் எவர் மீதும் தனிப்பட்ட முறையில் அக்கறை இல்லை எனவும், ஒரு செயலற்ற தன்மையே அரண்மனையில் நீடிப்பதாகவும் வெளியாகவிருக்கும் புதிய புத்தகத்தில் அலசப்பட்டுள்ளதாம்.
இருப்பினும், அரண்மனை ஊழியர்கள் இதுவரை அரச குடும்பத்து பிரச்சனைகளை திறம்பட தீர்த்ததில்லை என்றே கூறப்படுகிறது.
இன்னமும், அரண்மனைக்குள் முடியாட்சி காலகட்டத்தின் பழக்க வழக்கங்களே பின்பற்றப்படுவதாகவும், அதுவே டயானா தொடங்கி தற்போது மேகன் மெர்க்கல் வரையான தலைமுறையினருக்கு ஏற்பட்ட பல குடும்ப சிக்கல்களுக்கும் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஹரி – மேகன் தம்பதி அரண்மனையை விட்டு வெளியேற முடிவு செய்த காலகட்டத்தில், இருவரும் பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர்களே என ராணியார் அறிவித்தாலும், உண்மையில் அதற்கான வாய்ப்பு இனி அமையாது என்றே கூறப்படுகிறது.