உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6.50 லட்சத்தைத் தாண்டியது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவியது.
தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.63 கோடியை தாண்டியுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 99 லட்சத்தைக் கடந்துள்ளது. இருப்பினும் அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாளுக்கு நாள் இந்த நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. பெரும்பாலான மாகாணங்களில் சமூக பரவலே முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது.
இந்தியா போன்ற நாடுகள் கொரோனா பாதிப்புகள் குறித்து உண்மையை மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
அமெரிக்காவில் பல மாகாணங்கள் மீள முடியாமல் பரிதவித்து வருகிறது. இருப்பினும் ஜனாதிபதி டிரம்ப் தேர்தல் பரப்புரைக்கான ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.