திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேநபரை அடுத்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
சின்னக்குளம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இத்திக்குளம் பகுதியிலுள்ள வீட்டுக்குச் சென்று அங்கு குறித்த சிறுமி தனிமையில் இருக்கும் போது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, சிறுமியின் பெற்றோர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



















