இலங்கையில் பொதுத் தேர்தல் ஆரம்பமாகி உள்ள நிலையில் 660 பேர் வாக்களிக்க தகுதி இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலநறுவை, லங்காபுர சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளுடன் நெருங்கி செயற்பட்ட 660 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால் அவர்கள் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளனர்.
14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்யாமையினால் அவர்களால் வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலநறுவை பிரதேசத்தின் சுகாதார பணிப்பாளர் சுமாரவங்ஷ,
பொலநறுவை மாவட்டத்தின் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய வாக்களிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா எனவும் கண்கானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு பூர்த்தி செய்தவர்கள் இன்று மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















