வடகொரியாவில் சில முதன்மை பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்காக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 பேருக்கு பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை விதித்து கிம் ஜாங் வுன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் சிக்கியவர்களில் நான்கு பேர் வடகொரியாவில் ஆளும்கட்சி தலைவர்கள் என்பதும்,
இவர்கள் வடகொரியாவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் மாணவிகளை உட்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும், குறுகிய கால விசாரணைக்கு பின்னர், கிம் ஜாங் பரிந்துரையின் பேரில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டனர்.
இவர்களின் மரண தண்டனை கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது பொதுமக்கள் பலர் கூடியிருந்ததாகவும், ஊடகங்களுக்கு சிலர் சாட்சியமும் அளித்துள்ளனர்.
இந்த வழக்கில் பல உயர் அதிகாரிகளுக்கு பங்கிருக்கலாம் எனவும், கட்சியின் உயர் பதவி வகிப்பவர்கள் பலர் இதில் சிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கும்பலில் இணைந்துள்ள பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதம் 500 டொலர் ஊதியமாக வழங்கி வருகின்றனர்.
இதனாலையே, பல மாணவிகள் இந்த கும்பலிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, வேலை என்ன என்பதை அறியாமலே பல மாணவிகள் ரகசியமாக பதிவு செய்துள்ளதும்,
ஆனால் தங்களின் வேலை உண்மையில் பாலியல் தொழில் என தெரியவந்ததும் சில மாணவிகள் பொலிசாரை நாடியதாலையே, இது அம்பலமாகியுள்ளது.
மட்டுமின்றி, தமது விருப்பமான பல்கலைக்கழகம் என கிம் ஜாங் வுன் பிரகடனப்படுத்தியுள்ள சில பல்கலைக்கழக மாணவிகளும் இந்த கும்பலிடம் சிக்கியது, குறுகிய கால விசாரணைக்கு பின்னர் வழக்கை முடிக்க காரணமாக அமைந்துள்ளது.
வடகொரியாவில் பாலியல் தொழில் சட்டவிரோதமாக இருந்தாலும், உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ரகசியமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.