ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த செயற்குழுக் கூட்டம் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அகில விராஜ் காரியவசத்திற்குமிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையான நிலைமையை அடிப்படையாகக் கொண்டே அவர் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அகில விராஜ் ஊடகங்களிடம் கூறியமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க, கடுமையாக அவரை சாடியதாக தெரியவருகிறது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு வழங்குவது குறித்து ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக பேசப்படுகிறது.
சாகல ரத்நாயக்க, மிக நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.