உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆனது இதுவரை இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். இதனால் சரியான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் மலேசியாவில் கொரோனா வைரஸின் புதிய பிரிவு ஒன்று பரவி வருவதாக செய்தி வெளியாகி வருகிறது.
இந்த புது வகை வைரஸ் சாதாரண கொரோனா வைரஸைக் காட்டிலும் பத்து மடங்கு வீரியம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதிலும் தேக்கம் ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.
இந்த புதுவகை வைரஸினால் உலக விஞ்ஞானிகள் குழம்பிப் போயுள்ளனர். டி614-ஜி என்ற இந்த நியூட்ரிசன் மலேசியாவில் 45 பேரை தாக்கியுள்ளது.



















