மகாராஷ்டிரா மாநிலத்தில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மனைவியுடன் சனிக்கிழமை உறங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவருடைய மனைவி சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவரது மனைவி விற்பனையாளராக ஒரு கடையில் பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில், சனிக்கிழமை விடியற்காலை நான்கு மணிக்கு ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவிற்கு காத்தடிக்க எடுத்துச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் வெட்டியாக சுற்றி வரும் மூன்று நபர்கள் அவரது மனைவி தனியாக தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்து உள்ளனர்.
அவர்கள் அந்த வீட்டிற்குள் நுழைந்து ஆட்டோ ஓட்டுநரின் மனைவியை கூட்டு பலாத்காரம் செய்து இருக்கின்றனர். 6 மணி அளவில் காத்து அடித்துக் கொண்டு திரும்பி வந்த ஆட்டோ ஓட்டுனர் மனைவியின் அலங்கோல நிலையில் கொண்டு விசாரித்தபோது தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் விவரித்துள்ளார்.
இதனால், அந்த ஆட்டோ ஓட்டுநர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.



















