ஜேர்மனியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடலாம் என நாட்டின் தடுப்பூசி ஒழுங்குமுறை தலைவர் தெரிவித்தார்.
உலகெங்கிலும் 6-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பாளர்கள் மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்,
மேலும் பலர் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் கொரோனா தடுப்பூசிகள் செயல்படுகின்றனவா மற்றும் பாதுகாப்பாக இருக்கிறதா என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளின் தரவுகள் சில தடுப்பூசிகள் கொரோனா வைரஸுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதைக் காட்டியுள்ளன என்று ஜேர்மனியின் Paul Ehrlich Institute தலைவரான கிளாஸ் சிச்சுடெக் கூறினார்.
மூன்றாம் கட்ட சோதனைகளின் தரவு தடுப்பூசிகள் பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் காட்டினால், முதல் தடுப்பூசிகள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கீகரிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைத்த உத்தரவாதங்களின் அடிப்படையில், தடுப்பூசிக்கான நிலைக்குழு நிர்ணயித்த முன்னுரிமைகளுக்கு ஏற்ப, ஜேர்மனியில் உள்ளவர்களுக்கு 2020 ஆண்டின் தொடக்கத்தில் முதல் டோஸ் கிடைக்கும் என்று சிச்சுடெக் கூறினார்.