வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 2.6 மில்லியன் ரூபாவை மோசடி செய்த வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் தொகுதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் இவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் வெளிநாட்டு தொழில் முகவர் நிலையங்களை கொழும்பு மற்றும் வென்னப்புவ பகுதிகளில் நடாத்தி வருகின்றமை தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.