இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் இதுவரை 29 லட்சத்து 5 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 21 லட்சத்து 58 ஆயிரத்து 946 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 54 ஆயிரத்து 849 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 68 ஆயிரத்து 898 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 62 ஆயிரத்து 282 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஒரே நாளில் 983 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவில் நேற்று மட்டும் ஒரே நாளில், 8 லட்சது 5 ஆயிரத்து 985 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை மொத்தம் 3 கோடியே 34 லட்சத்து 67 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



















