லண்டனில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, நான்கு பேர் கொண்ட குழுவிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதால், அவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Harrow-வில் கடந்த 20-ஆம் திகதில் இரவு உள்ளூர் நேரப்படி 10 மணியளவில், Violent Crime Taskforce (VCTF), அதாவது வன்முறை குற்றப் பணிக்குழுவின் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஆண்கள் குழுவில், இளைஞர் ஒருவர் வைத்திருந்த நீல நிற பை திடீரென்று கீழே விழுந்தது.
அப்போது அது தரையில் விழுந்தவுடன் கிளிங் என்று சத்தம் கேட்டது. இதனால் அதிகாரிகள் உடனடியாக அந்த பையை வாங்கி திறந்து பார்த்த போது, குண்டுகள் ஏற்றப்பட்டு தயாரான நிலையில் இருந்த ஒரு கைத் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.
இதையடுத்து துப்பாக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் துப்பாக்கி வைத்திருந்தாக கூறி, சந்தேகத்தின் பேரில் 21 வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, வடக்கு லண்டன் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
North West Basic Command Unit (BCU)-வின் தலைமை கண்காணிப்பாளர் Roy Smith, தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டு, ரோந்து பணியின் போது குண்டுகள் நிரப்ப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்டிருக்கும், இந்த துப்பாக்கியால் யாரையாவது பலத்த காயப்படுத்தவோ அல்லது கொலை செய்யவோ போயிருக்கலாம் என்று நான் முழு மனதுடன் நம்புவதாக கூறியுள்ளார்.