சிங்கப்பூரில் பணிப்பெண்ணை தாக்கி சித்ரவதை செய்த இந்திய தம்பதிக்கு சிறை தண்டனையும், மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது..
இந்தியாவை சேர்ந்த முகமது தஸ்லீம் – பாரா தெஹ்சீன் என்ற தம்பதியினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
இவர்கள், கடந்த, 2016-ஆம் ஆண்டு அமந்தீப் கவுர் என்ற இந்திய பெண்ணை, வீட்டு வேலைக்காக அமர்த்தினர்.
ஆனால், அமந்தீப் கவுர் சரியாக வீட்டு வேலை செய்வதில்லை என்று கவுரை, தெஹ்சீன் பலமுறை அடித்துள்ளனர்.
அவரது கணவர் தஸ்லீம், இரண்டு முறை, கவுரை எட்டி உதைத்தும், கையால் தாக்கியும் உள்ளார்.
இந்நிலையில், அப்பகுதியில் பெயிண்டர் வேலை பார்த்து வந்த மணி மனோகரன் என்பவரை, அவர்கள் செய்யும் கொடுமையைக் கண்டு, கவுரை அவர்களிடமிருந்து பத்திரமாக மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்.
அதன் பின் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உடலில் பல காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டதால், இதன் வழக்கு விசாரணை நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குறித்த பணிப்பெண்ணை, இந்திய தம்பதி சித்ரவதை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாரா தெஹ்சீனுக்கு, 21 மாத காலமும், முகமது தஸ்லீமுக்கு, நான்கு மாத காலமும் சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈடாக, தெஹ்சீன், 2.4 லட்சம் ரூபாயும், தஸ்லீம், 55 ஆயிரம் ரூபாயும் வழங்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் ஜாமீன் வழங்கியது.