பிரான்சில் மனைவி கண்முன்னே கணவர் திருப்பிலியால் நெஞ்சில் குத்தப்பட்டு கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின், Vitry-sur-Seine நகரில் இருக்கும், l’avenue du 8 Mai 1945 எனும் வீதியில் கடந்த வியாழக் கிழமை இரவு 39 வயது மதிக்கத்தக்க நபர், தன்னுடைய மனைவியுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்/.
அப்போது திடீரென்று வாகனத்தை மறித்த மர்ம நபர் ஒருவர் மறித்துள்ளார். இதனால் காரில் இருந்து அவர் வெளியேறியவுடனே தான் மறைத்து வைத்திருந்த screwdriver-ஆல் அவரது நெஞ்சில் குத்தியுள்ளார்.
இது அவரது நெஞ்சில் ஆழமாக பதிந்ததால், இரத்தம் வழிந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போன அவரது மனைவி உடனடியாக உதவிக்கு அங்கிருந்தவர்களை அழைத்துள்ளார்.
ஆனால், அவர் அதற்கு அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். screwdriver-ஆல் குத்திவிட்டு தப்பி ஓடிய அந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.