ஒருநாடு ஒரு சட்டம் என்ற கொள்கையை அரசியலமைப்பில் கொண்டு வருவது சிரமமான பணியாகவே இருக்கும் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல இதனை நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையின் போது ஜனாதிபதி இந்த ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையை வலியுறுத்தியிருந்தார்.
இலங்கையை பொறுத்தவரை பல இடங்களிலும் மக்கள் மத்தியில் தனிப்பட்ட இயல்புகளின் திறன்களின் அடிப்படையில் பல்வேறு சட்டங்கள் உள்ளன
கண்டி சட்டம் அவ்வாறான ஒன்றாகும். இது ஒரு தலைமுறையில் இருந்து மற்றும் ஒரு தலைமுறைக்கு எவ்வாறு எடுத்துச்செல்லப்படவேண்டும் என்பதை கோடிட்டு காட்டுகிறது.
அதேபோன்றே தேசவளமை மற்றும் முஸ்லிம் சட்டங்களும் உள்ளதாக கிரியெல்ல குறிப்பிட்டார். எனவே இவற்றை மாற்ற நினைப்பது கடினமான காரியமாகவே இருக்கும் என்று கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.


















