ராஜபக்ச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் பொறுப்பின் கீழ் 71 அரச நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கொள்கை சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில் அனைத்து நேரங்களிலும் அரசாங்கத்தை விமர்சிக்க தயாரில்லை.
எனினும் நாடு வென்றெடுத்துள்ள சுதந்திர ஜனநாயகத்தை ஒழிக்க முயற்சித்தால், அதற்கு நிபந்தனையின்றி எதிர்ப்பை முன்வைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டங்களை அனுபவித்து வரும் சூழ்நிலையில், முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் 19வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.