பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வெடிப்புச் சம்பவங்கள் இன்றையதினம் பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள சுலு மாகாணத்தின் சந்தைப் பகுதியிலும், தேவாலய பகுதியிலும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இராணுவ அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.