ஸ்ரீலங்காவில் புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காட்சிப்படுத்தல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் அல்ககோல் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் மருந்துகள், புகையிலை மற்றும் அல்ககோல் தடுப்புக்கான புதிய செயல் திட்டத்தை உருவாக்கும் பயிற்சி திட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புகையிலை மற்றும் அதுசார்ந்த பொருட்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளவே இந்த நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது.
ஆகவே புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காட்சிப்படுத்தலை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.