யாழ். மாவட்டத்தில் தனக்கு தெரியாமல் எந்தவொரு அமைச்சரின் ஊடகவும் எந்த செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்டச் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரான அங்கஜன் இராமநாதனால் 2020.08.18ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரான கணபதிப்பிள்ளை மகேசனிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர் வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் மயப்படுத்தப்படும் போது எனது தலைமையின் கீழ் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து, இதனை சகல பிரதேச செயலாளருக்கும் அறிவிப்பதோடு திட்டங்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து அமைச்சுக்களின், அமைச்சர்களின், அமைச்சுக்களின் செயலாளரக்ளின், திணைக்களங்களின் ஊடாக யாழ். மாவட்டத்தில் அபிவிருத்தியை அல்லது செயல் திட்டங்களை எனக்கு தெரியாமல் எந்தவொரு அமைச்சுக்களின் ஊடாகவும் – யாழ். மாவட்டத்தில் மாவட்டச் செயலகம், மாவட்டச் செயலாளர் உடன் அல்லது பிரதேச செயலாளர் உடன் தொடர்பு கொண்டு அபிவிரு்தி ஒருங்கிணைப்பு தலைவராகிய எனது அனுமதி இல்லாமல் – செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.